2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

துறைநீலாவணையில் கூட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிரசுக்கட்சியின் துறைநீலாவணை கட்சி ஆதரவாளர்களின் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் கட்சியின் பிரதேச வடக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் கே.விஜயரதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெருமளவான தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள ஞா.சிறிநேசனை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக நியமிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான மகஜர் ஜனாதிபதி மற்றம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தமிரசுக்கட்சியின் துறைநீலாவணை வடக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் கே.விஜயரதன் தெரிவித்தார்.

இதன்போது, எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன்  தெரிவுசெய்யப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் துறைநீலாவணை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் புனரமைக்கப்படாதுள்ள துறைநீலாவணை பிரதான வீதியின் புனரமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X