2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூக பராமரிப்பு நிலையக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் இந்தக் கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

இவ்வைபவத்தில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.மணிவண்ணன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் வாழைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன் உட்பட உதவி பிரதேச செயலாளர்கள், சமூக சேவை திணைக்களத்தின் அதிகாரிகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் ஐந்து மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த சமூக பராமரிப்பு நிலையக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டடத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சமூக பராமரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X