2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தாலிக்கொடியை அறுத்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாகரை பிரதேசத்தில் பெண் ஒருவரின் தாலிக்கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வியாழக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட இந்தச் சந்தேக நபரிடம் இருந்து தாலிக்கொடியையும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகரை வம்மிவட்டுவான் பிரதேசத்தை சேர்ந்த குடும்பப் பெண் தனது எட்டு மாத குழந்தையுடன் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பெண்ணின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து குறித்த பெண் சத்தம் போட்டு பிரதேச மக்களின் உதவியுடன் திருடர்களைத் துரத்தியபோது அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது ரிதிதென்ன பகுதியில் மோட்டார் சைக்கிளையும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது, மற்றைய சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் பல குற்றச்சாட்டுக்களில் தேடி வந்த குற்றவாளிகள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X