2025 மே 12, திங்கட்கிழமை

திவிநெகு உதவிகளை கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்

Kogilavani   / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

'மாற்றத்தின் மூலம் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்திலே பொதுமக்களும் தங்களது மன நிலையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்' என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்களை கையளிககும் நிகழ்வு நேற்று பிரதேச செயலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

'தான் செய்யும் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஒவ்வொருவரது மனதிலும் வைராக்கியம் இருக்க வேண்டும். வைராக்கியம் இல்லை என்றால், ஒவ்வரு வருடமும்  இவ்வாறான பொருட்களை எதிர்பார்ப்பவர்களாக இருப்பதோடு எதிர்பார்ப்பவர்களது தொகையும் அதிகரித்தே காணப்படும்.

இந்த முறை பொருட்களை பெறுபவர்கள் இதன் மூலம் தொழில் செய்து அடுத்த வருடம் தான் பொருளாதார ரீதியில் வளர்ந்து விட்டோம் என்று தங்களது திவிநெகும முத்திரைகளை திரும்பி கொடுக்கின்றவர்களாக திகழ வேண்டும்' என்று அவர் கூறினார்.

இதன்போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 125 திவிநெகும பயனாளிகளுக்கு திவிநெகும திணைக்களத்தின் அனுசரனையில் அறுபத்தி நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X