2025 மே 13, செவ்வாய்க்கிழமை

துஷ்பிரயோகங்கள், வன்முறைகளை தடுக்க விசேட திட்டங்கள்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் கீழ் விசேட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் மகளிர் பணியத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சிறுவர் மற்றும் பெண்களின்; பாதுகாப்பையும்; அவர்களின் எதிர்கால நலனையும் கருத்தி;ற்கொண்டு இவ்வாறான நிலையங்கள் நாடெங்கிலும் அமைக்கப்படுகின்றன. இதன் 28ஆவது பணியகமாக இங்கு திறக்கப்பட்டுள்ளது. அதிக முறைப்பாடுகள் கிடைக்கும் பகுதிகளிலேயே இந்த நிலையம் திறக்கப்படுகின்றது' என்றார்.

'சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வன்முறையற்ற சிறந்த சூழலை உருவாக்கும் வகையிலேயே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தமது தேவைகளை சுதந்திரமாக நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பொலிஸ் என்றால் பயங்கொள்ளும் நிலைமை இருந்துவருகின்றது. ஆனால், இந்த நிலையம் மூலம் அவ்வாறு எந்த பயமும் இன்றி தமது தேவையை நிறைவேற்ற முடியும். அதற்கு ஏற்றவாறே இந்த நிலையத்தின் செயற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்கள் மூலம் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்கள் தோறும் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இந்தக் குழு பொலிஸ் மற்றும் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
 

பெண்களையும் சிறுவர்களையும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பதும் அவர்களை பாதுகாப்பதும் சமூகத்தின் பொறுப்பாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X