2025 ஜூலை 16, புதன்கிழமை

தங்க நகைகள் கொள்ளை; மூவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, நாவற்குடா பிரதேசங்களில் 12 வீடுகளை உடைத்து, 55 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூன்று சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி, இன்று (28)  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறியின் பணிப்புரையின் கீழ், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கயான் ராஜகருண தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமிருந்தும் கொள்ளைக்குப் பயன்பத்திய கார், மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X