2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு

Niroshini   / 2016 நவம்பர் 01 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டடும் இடத்தை சிரேஷ்ட சட்ட வைத்திய நிர்ணத்துவர், அரச பகுப்பாய்வுப் பிரிவினர் மற்றும் புவிசரிரவியல் திணைக்களத்தினர் ஆகியோரை உள்ளடக்கிய நிபுணர் குழுவை பார்வையிட்டு, இது தொடர்பான அறிக்கையை மன்றில் சம்ரபிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

 மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்துக்கு இன்று செவ்வாய்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி, அங்கு விசாரணையை மேற்கொண்டார்.

இதன்போது, குறித்த இடத்தில் காணப்பட்ட தடயங்களை சேகரிக்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தை மேலும் அகழ்வு செய்ய வேண்டியுள்ளதால் குறித்த பகுதியில் எந்தவித அகழ்வுப் பணியிலும் ஈடுபட வேண்டாம் வீட்டு உரிமையாளருக்கு உத்தரவிட்டதுடன், குறித்த பகுதிக்கு பொலிஸார் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X