2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தடையை மீறி வகுப்புகள்; கல்வி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

வா.கிருஸ்ணா   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாநகர சபையின் தீர்மானத்தை மீறி வகுப்புகளை நடத்திய மட்டக்களப்பின் பிரபல தனியார் கல்வி நிறுவனமொன்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், கல்வி அமைச்சானது, மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்,  பாடசாலைகளை மூடி, இந்நோய்த் தொற்று ஏற்படாமால் தடுக்க மாணவர்களுக்கு விடுமுறையளித்துள்ளது.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்கோடும், மாநகருக்குள் வதியும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தப்பட வேண்டுமென, மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியதுடன், அதற்குரிய அறிவிப்புகளும் விடுக்கப்படிருந்தன.

இந்நிலையில், மேற்படித் தீர்மானத்தை மீறி, மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் வகுப்புகளை நடத்தய பிரபல தனியார் கல்வி நிறுவனத்தை, மட்டக்களப்பு பொலிஸார், சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர்  முற்றுகையிட்டதுடன், வழக்குத் தாக்கலும் செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு நோய்த் தூற்றைப் பரப்பக்கூடிய வகையில் செயற்பட்டமை, அரச சட்டதிட்டங்களை மீறி நடந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X