2025 மே 17, சனிக்கிழமை

தண்டவாளத்தில் மயங்கினார் இளைஞர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 30 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர்ப் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த இளைஞன் ஒருவனை நேற்று (29) இரவு மீட்டெடுத்த பொதுமக்களை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளனர்.

ஏறாவூர் - மிச்நகர் பகுதியை ஊடறுத்துச் செல்லும் ரயில் தண்டவாளத்தில், இளைஞர் ஒருவர் மயங்கிக் கிடந்துள்ளார்.

அடுத்து ஒரு சில நிமிடங்களில் ரயில் அப்பகுதியைக் கடக்கப் போகும் தருணத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விரைந்து செயற்பட்ட உள்ளூர் கிராம மக்கள், குறித்த இளைஞரை, தண்டவாளத்திலிருந்து மீட்டெடுத்து, உடனடியாக அருகிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இளைஞர், இன்னாரென அடையாளம் காணப்படவில்லை என உதவிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளில், ஏறாவூர்ப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .