Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் திருவுருவச் சிலை அமைப்பு நடவடிக்கைகள், மட்டக்களப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு, பஸ் நிலையச் சந்தியில் வாவிக்கரை வீதி 01இல் இத்திருவுருவச் சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைக்கப்படுகின்ற திருவுருவச் சிலையானது, எதிர்வரும் திங்கட்கிழமை (15) மாலை 02.30 மணியளவில் திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தந்தை செல்வா சிலை நிர்மானிப்புக் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வாவின் சிலை திறப்பு நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago