2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தன்வந்திரி மகா யாகம்...

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

உலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டியும், கொரனா தொற்றால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்தக்காகவும், மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் கோவிலில்,  தன்வந்திரி மகா யாகம், இன்று (7) நடாத்தப்பட்டது.

சக்தி படைத்த மூலிகைகளைக் கொண்டு இந்த தன்வந்திரி மகா யாகம் நடாத்தப்பட்டது.

கோவிலின் பிரதமகுரு கிரியா கலாபமணி, கிரியாஜோதி, திருமுருககலாமணி, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ மா.குலேந்திரரூப சர்மா தலைமையில் இந்த மகா யாகம் நடைபெற்றது.

இதன்போது மூலிகைகள் கொண்டு யாகம் நடத்தப்பட்டதுடன் மந்திரிக்கப்பட்ட மகா கும்பம், ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த யாகத்தின்போது கொரனா தொற்றிறை இல்லாமல்செய்து நாட்டை சுபீட்சத்துக்குக் கொண்டுவர இறையாசி வேண்டப்பட்டதுடன் நாடடை சிறந்த முறையில் கொண்டுசெல்லும் ஜனாதிபதி, பிரதமருக்கும் நல்லாசிவேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த யாக பூஜையில், கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X