Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் வழியில் சிறைச்சாலை வாகனத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த நபர் திருடப் போன இடத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை 10ஆம் கட்டை வீதியிலுள்ள வீடொன்றில் திருடச் சென்றபோது சந்தேக நபர் வியாழக்கிழமை இரவு பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். அவ்வேளை, இந்த சந்தேக நபர் அவ்விடத்தில் நின்றோரைத் தாக்கிவிட்டு தப்பியோட முனைந்தபோது இடம்பெற்ற கைகலப்பில் சந்தேக நபரின் தலையில் பலத்த காயமேற்பட்டுள்ளது.
இவ்விடயம் பொலிஸாருக்கு உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டதும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்தனர்.
காயமடைந்த சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே, ஆறு வழக்குகளுக்காக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொக்கட்டிச்சோலை மற்றும் முகத்துவாரம் ஆகிய இரு வெவ்வேறு போலியான முகவரிகளைக் கொடுத்து நடமாடி வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பற்றிய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago