Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமாக இருந்தால், பரஸ்பர விட்டுக்கொடுப்பு அவசியமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில் செவ்வாய்கிழமை (29) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலத்தில் எமது நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இன ஐக்கியம் சிதைக்கப்பட்டிருந்தது. இது கவலைக்குரிய விடயமாகும்' என்றார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் தாய்மொழியாக தமிழ்மொழிழையே பேசுகின்றனர்.
சிறுபான்மையினரின் அரசியல் உரிமைப் போராட்டப் பாதையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பயணித்;தனர். தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் சேர்ந்து இந்த நாட்டில் சிறப்பானதொரு சமூக சக வாழ்வையும் அரசியல் கலாசாரத்தையும் கட்டிக்காத்து வளர்த்தனர். ஆனால், யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை. பின் நாட்களில் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டு அது மாறாத வடுவாகிவிட்டது. அரசியலுக்காக எமக்குள் இருந்த எல்லா உறவுகளையும் பிரித்து, பகைத்து இழப்புகளையும் மனக்காயங்களையும் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த காலத்தில் தமிழ், முஸ்லிம் இன முரண்பாடுகளால் இரு வேறாக்கப்பட்ட எல்லாவற்றையும் இன ஒற்றுமைக்காக நாம் இனி இணைக்கவேண்டும். தமிழ், முஸ்லிம் ஐக்கியம் வளர்வதற்கும் எமது சகவாழ்வையும் உரிமைகளையும் தனித்துவத்தையும் நிலை நாட்டுவதற்குமேற்ற சூழல் இப்பொழுது கனிந்துள்ளது. எட்டாக்கனியாக இருந்த இன ஒற்றுமை என்ற விடயத்தை கிழக்கு மாகாணசபை தற்போது சாதித்துக் காட்டியுள்ளது.
மனிதத்துவ நோக்கில் மானுடம் வாழ வேண்டுமென்ற அடிப்படையில், நாம் இணைந்து செயற்பட முன்வந்து இழந்துபோன எமது தமிழ், முஸ்லிம் இன உறவை மீளக் கட்டியெழுப்ப பாடுபடுவோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago