2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’தமிழர்களின் காணிகள் அபகரிப்பு’

Editorial   / 2018 ஜூன் 30 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கில், சட்டவிரோதமாக தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், இதனால், கிழக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலையேற்பட்பட்டுள்ளதெனவும் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அலுவலகத்தில், ​இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது  தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சட்டத்துக்கு முரணான போலி ஆவணங்களைத் தயாரித்து, தமிழ் மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.

2009ஆம் ஆண்டு வரை, தமிழ் மக்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலை காணப்பட்டது என்றும் ஆனால், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழ் மக்கள், நடுத்தெருவில் விடப்பட்டு விட்டனர் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X