Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2020 மார்ச் 15 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு, கிழக்கு மறை மாவட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், அருட்பணி சுஜித்தர் சிவநாயகம் அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் மதகுருக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், தமிழீழ விடுதலைக் கழகத்தின் உபதலைவர் கே.விமலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் த.சுரேஸ், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி டி.சிவநாதன், மட்டக்களப்பு சிவில் சமூக ஒன்றியங்களின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், சிவல் சமூக மய்யத்தின் பிரதிநிதி டி.நிதர்சன், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைய செயலாளர் செல்வி அனோஜா உட்பட சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, தற்போதைய நிலையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையின் முக்கியத்துவம், ஒற்றுமைப்பட முடியாமைக்கான காரணங்கள், ஒவ்வொரு கட்சிகளினதும் கொள்கை விளக்கங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.
கிழக்கில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய முக்கியத்துவம் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago