Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வ.துசாந்தன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒரு பகுதியினர் தான்தோன்றித்தனமாக, அதிகாரப்போக்குடன் செயற்படுவார்களானால் அதன் பாதிப்புகள், எந்தத் தமிழ்க் கட்சிக்கும் ஏற்படாது. அது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்” என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு சந்தியிலுள்ள நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வொன்றைப் பெறுவதற்கு நாங்கள் முன்னோக்கிப்போகும் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பலப்படுத்திக்கொண்டுசெல்லவேண்டிய தேவையுள்ளது.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நாங்கள் கொண்டுவரவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றித்து பயணிக்கவேண்டும். அதனைவிடுத்து, தான்தோன்றித்தனமாக ஒரு பிரிவு நடக்கின்றது என்றால் அது, த.தே.கூவுக்கோ அதில் உள்ள கட்சிகளுக்கோ செய்யும் துரோகம் அல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கின் ஆட்சியை நாங்களே கைப்பற்றுவோம் என அதன் தலைவர் கூறுகின்றார்.முஸ்லிம் மக்களுக்குள் இன்று சரியான ஒற்றுமையும் சரியான உறுதிப்பாடும் இருக்கின்றது.
ஆனால், த.தே. கூ.க்குள் சிறுசிறு விடயங்களுக்குள் ஒற்றுமையில்லாத நிலையே இருந்துவருகின்றது. சிறிய விடயங்களில் கூட புரிந்துணர்வு இல்லாத நிலையிருந்துவருகின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் எந்தவகையில் மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ளப்போகின்றார்கள்.
தமிழ் மக்கள் இன்னும் பலப்படுத்தப்படவேண்டும். அனைவரையும் அரவணைத்துக்கொண்டு, அனைவரையும் இணைத்துக்கொண்டுசெல்லும்போதே தமிழ் மக்களுக்கான சரியான தீர்வை, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றமுடியும்” என்றார்.
40 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
47 minute ago
1 hours ago