2025 மே 01, வியாழக்கிழமை

தமிழ் மக்களை ஏமாற்றுவது ‘இனி இடம்பெறாது’

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

தமிழ் மக்களை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு செய்வதை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் இனி இடம்பெறாதென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இ.தவஞானசுரியம் தெரிவித்தார்.

வெல்லாவெளி, திக்கோடையில் ஞாயிற்றுக்கிழமை (14)மாலை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு, கருத்துரைத்த போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய கட்சியில் முதன்முதலாக 8 தமிழர்கள் போட்டியிடுகின்றோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, தமிழ் மக்களின் நலன் கருதிதான் அரசியலில் பயணிக்கின்றது. தமிழ் மக்களை பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருநாளும் கைவிடாது.

“வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொண்டு, ஆட்சியமைக்கும். அமையவிருக்கின்ற அரசாங்கத்தால் மட்டக்களப்பு - வாகரையில் “பசுமைப்புரட்சி” எனும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

“இதன்மூலம், மாவட்டத்தை சேர்ந்த 4,000 இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை நான் பெற்றுக்கொடுப்பேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை ஒழிப்பதற்கும், அபிவிருத்தியை முன்கொண்டு செல்வதற்கும் எமது கட்சி எப்போதும் கைகொடுக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .