Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
‘கிழக்கில் தமிழ் மக்கள் மீதான படுகொலையை உலகறியச் செய்தவர் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களாகும்” என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிரீநேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பில் நேற்று (25) மாலை அனுஷ்டிக்கப்பட்ட போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“கொக்கட்டிச்சோலை படுகொலை, மயிலந்தன படுகொலை, மகிழடித்தீவு படுகொலை, சத்துருக் கொண்டான் படுகொலை என்று கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளை அவர் அம்பலற்குக் கொண்டு வந்து உலகறியச் செய்த உத்தமராவார்.
“அவர் உள் நாட்டு அரசியலில் மட்டும் பிரகாசிக்கவில்லை. சர்வதேச மட்டத்திலும் அறியப்பட்ட புகழுக்குரியவராக இருந்தார்.
“அப்படிப்பட்ட ஒரு பெருமனிதர் கிழக்கு மாகாணத்தில் திமிழ் தேசியத்தின் அடையாளமாக இருந்தார்.
“தமது கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு கிழக்கிலிருக்கின்ற வலியைமான தமிழ்த் தேசியவாதிகளை அழித்து விட வேண்டும் என்று அப்போதைய சர்வாதிகார ஆட்சியாளர்கள் நினைத்ததன் விளைவாக, அதில் கை வைத்து அழிக்கப்பட்ட ஒரு முக்கிய தலைவர்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களாகும்.
“பத்திரிகை துறையின் மூலம் தமிழ்த் தேசியத்தை உரைத்து வந்த ஊடகவியலாளர்களான சிவராம் நடேசன் கந்தையா போன்றவர்கள் எல்லாம் படுகொலை செய்யப்பட்டார்கள்.
“எடுபிடிகள் ஏவலாலிகள் கிழக்கின் ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்களினால்தான் இந்த உத்தமர் அண்ணன் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் உயிர் பறிக்கப்பட்டது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .