Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ரா ராஜபக்ஷவை ஆதரிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என, கட்சியின் செயலளார் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில், இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம், நிர்வாகம், பொருளாதாரம், நிர்வாகம் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில், கிழக்கு மாகாணத்தைக் கட்டிக்காக்க வேண்டிய தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையிலேயே, இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார்.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, கோட்டாபய ராஜபக்ஷ ஒரு இணக்கப்பட்டுக்கு வந்துள்ளார் என்றும் அவர் வெளிநாட்டிலிருந்து வந்த பின்னர், இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.
5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago