2025 மே 19, திங்கட்கிழமை

‘தமிழ்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் எல்லைகளை பாதுகாக்க போட்டி’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதாக, அக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான தலைமை வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

“ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், தமிழர்களின் தாயக போராட்டத்துக்கு மதிப்பளித்து, மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கியது. அந்தவகையில் அபிவிருத்திக்காகவும் உரிமைக்காகவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாக இன்று (27) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சகல இடங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுகிறது. நாட்டின் ஆட்சியாளர் என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியில் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் பலமான அணியொன்று களமிறக்கப்பட்டுள்ளது.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எல்லை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இதனைத் தடுக்க வேண்டுமானால் அதிகாரம் எமது கைகளுக்கு வரவேண்டும் அதற்காகவே இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

“எங்களுடைய சபை நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் கல்வி மற்றும் எமது சமூகத்தின் இன விருத்தி தமிழர் நலனில் என்பவற்றில் மிகவும் கவனமாக செயற்படுவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X