2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 டிசெம்பர் 30 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் எதிர்வரும்  திங்கட்கிழமை(01) மாலை 02.30 மணிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வட,கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. நேற்றையத் தினம்(29) யாழ்ப்பாணத்திலும், இன்றையத்தினம்(30) வவுனியா, மன்னார்  ஆகிய பகுதிகளிலும் நாளைய தினம் (31) கிளிநொச்சி, திருகோணமலையிலும், நாளை மறுதினம்(01) அம்பாறை மட்டக்களப்பு என அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X