2025 மே 09, வெள்ளிக்கிழமை

தற்காலிக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலிருந்து தற்காலிக இடமாற்றம் பெற்று வேறு வலயங்களில் கடமையாற்றுகின்ற அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக கல்குடா கல்வி வலயத்துக்கு திரும்ப வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களுக்கான சம்பளம் இடைநிறுத்தப்படுமென அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா, இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

சுய காரணங்களுக்காக கல்குடா கல்வி  வலயத்திலிருந்து தற்காலிக இடமாற்றங்களைப் பெற்ற ஆசிரியர்கள் இவ்வருடம் முதலாம் தவணை ஆரம்பித்த 04ஆம் திகதியே இவ்வலயத்துக்கு கடமைக்காக திரும்பியிருக்க வேண்டும். ஆனால், குறித்த திகதியில் இவ்வலயத்துக்கு கடமைக்காக திரும்ப முடியாதுவிடின், தங்களின் வருகையை உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய எந்தவித தற்காலிக இடமாற்றங்களும் இனிமேல் வழங்கப்படாதெனவும் அவர் கூறினார்.

அத்துடன், இடைநிலைப் பாடசாலைகளில் கற்பிக்கும் அனைத்து ஆரம்பப்பிரிவு நியமனம் பெற்ற ஆசிரியர்களும் ஆரம்பப்பிரிவுப் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். அவர்களின் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை கல்குடா வலயம் மேற்கொண்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X