Suganthini Ratnam / 2016 ஜூன் 12 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடியிருப்புக் கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வகுப்பறை சனிக்கிழமை (11) தீக்கிரையாகியுள்ளது. இதன் காரணமாக அவ்வகுப்பறையிலிருந்த தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இவ்வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக புதிய வகுப்பறை அமைக்கப்பட்டு, அதில் முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருந்தன. இவ்வகுப்பறையே தீக்கிரையாகியுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத்; தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த வித்தியாலயத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025