2025 மே 10, சனிக்கிழமை

தலைமறைவாகியிருந்தவர் கைது

Menaka Mookandi   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பிள்ளைப் பராமரிப்புக்கான பணம் செலுத்தாமை மற்றும்  நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள விபுலாநந்த வீதி, பெரிய நீலாவணையில் இடம்பெற்றுள்ளது.

பெரிய நீலாவணையைச் சேர்ந்த நடராஜா சௌக்கியதாசன் (வயது 41) என்பவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் இவர், பிள்ளைப் பராமரிப்புக்காக பணம் செலுத்தாமை தொடர்பாக நீதிமன்றின் அழைப்பாணைக்கு சமுகமளிக்கத் தவறியதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகவே இருந்து வந்த நிலையில் ஞாயிறு காலை கைது செய்யப்பட்டார்.

கல்முனை சிறு குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.நௌபர் தலைமையில் சென்ற பொலிஸ் அணியினர் இவரைக் கைது செய்தனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X