Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகளை முகாமைத்துவ, மீள் சுழற்சி செய்யும் ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள நிலையத்தில் இன்று (07) பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கு கொட்டப்பட்டுக் கிடக்கும் திண்மக் கழிவில் தீ ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த இயந்திரங்களிலும் தீ பரவியுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், பொதுமக்கள், ஏனைய பகுதிகளுக்குத் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தத் தீச் சம்பவத்தால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக எரிந்துள்ளனவென, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Jul 2025