2025 ஜூலை 19, சனிக்கிழமை

திருப்பெருந்துறையில் 2ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள திருப்பெருந்துறையிலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை அகற்றுமாறு கோரி, திருப்பெருந்துறை மக்கள் இரண்டாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பெருந்துறை, கொத்துக்குள சிரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்னால் வீதியின் ஓரத்தில் அமர்ந்திருந்து அவர்கள் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திண்கமக்கழிவு நிலையத்தை உடனடியாக அகற்றுமாறு வலியுறுத்திய அம்மக்கள், இதனை அகற்றும் வரை தாம் இங்கிருந்து செல்லமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.  

கடந்த 22ஆம் திகதியன்று ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதியில் பாரியளவில் சூழல் மாசடைந்துள்ளதாகவும் அதனால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் கிராமம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, திங்கட்கிழமை தொடக்கம் திண்மக்கிழவு ஏற்றிய வாகனங்கள் இந்த வீதியால் செல்லவில்லை. அவ்வாறு செல்லத் தாம் விடமாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X