2025 மே 21, புதன்கிழமை

’திருவிழாவுக்கு முன்னர் தீர்த்தக் குளம் புனரமைக்கப்படும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இன்று (09) விஜயம் செய்து, ஆலயத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்விலும் கலந்துகொண்டர்.

பூசை வைபவம் நிறைவுபெற்றதும், ஆலய நிர்வாகத்தினருடன் அவர் கலந்துரையாடினார்.

இதன்போது, ஆலயத்தின் தீர்த்தக் குளத்தைப் புனரமைத்துத் தருமாறு ஆலய நிர்வாகத்தினர் கோரியதற்கமைவாக, நீர்ப்பாசனத் திணைக்களத்துடனும் மட்டக்களப்பு மாநகரசபையுடனும் இணைந்து, தீர்த்தக் குளத்தை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தர ஏற்ற ஒழுங்குகள் செய்வதாக, ஆளுநர் உறுதியளித்தார்.

மேலும், ஆலய வளாகத்தைத் துப்புரவு செய்யும் பணிக்கு, மேலும் தொழிலாளர்களை ஈடுபடுத்த மாநகரசபைக்குப் பணிப்பதாகவும், ஆலய நிர்வாகிகளிடம் அவர் உறுதி வழங்கினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபைச் செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வெள்ளக்குட்டி தவராஜா மற்றும் ஆலய வண்ணக்கர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .