2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 04 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப் பகுதியில் மிருகவேட்டையில் ஈடுபட்ட ஒருவரின் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்ததில், அந்நபர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த காட்டுப் பகுதியில் சம்பவதினமான நேற்று (03) இரவு 10 மணிக்கு வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் மிருகவேட்டைக்கு சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.

இதன்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அந்நபர் படுகாயமடைந்த நிலையில், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X