2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் பலி

Editorial   / 2018 ஜூன் 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 5, இல் நேற்றிரவு (08) நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பழனிபாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே, இந்தத் துப்பாகிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

இந்த வயோதிபர், புதிய காத்தான்குடி 5,  கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள  அவரின் ஹோட்டலில் இருக்கும்போது, அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் இரவு 11.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சூடுபட்ட  முதியவர் ஸ்தலத்திலே சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.

சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரிசோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு விரைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, குறித்த பிரதேசத்தில் பாதகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X