2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைத்து தரைமட்டம்

Freelancer   / 2022 நவம்பர் 25 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்தார்.

பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மன் நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான எந்த நிதியும் தரவை துயிலும் இல்லத்திற்கு கிடைக்கவில்லை. ஏற்பாட்டுக்குழுவான நாங்கள் உள்ள நிலையில் அவ்வாறான எந்த நிதியும் கிடைக்கவும் இல்லை நாங்கள் கையாளவுமில்லை.அது யாருக்கு அனுப்பப்பட்டது என்பது இதுவரையில் எங்களுக்கு தெரியாது.

இவ்வாறான பொய்யான பரப்புரைகளை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தரவையில் முன்னெடுக்கப்படும் சிரமதான பணிகள் ஒவ்வொரு மாவீரர் குடும்பமும் இணைந்து புலம்பெயர்ந்துள்ள மாவீரர்களின் சகோதரர்கள்,உறவினர்கள் இணைந்துதான் இதனை செய்கின்றனர்.

இங்கு சொல்லப்படுகின்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒரு குண்டூசி அளவுகூட உதவிகள் செய்யப்படவில்லை.

அத்துடன் நேற்று நாங்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் மேடையொன்றை நாங்கள் அமைத்திருந்தோம். இன்று காலை நாங்கள் சென்று பார்த்தபோது குறித்த மேடை விசமிகளினால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இறந்தவர்களுக்கான நினைவேந்தலை செய்யலாம் என்று அறிவித்துள்ள காலத்தில் விசமிகள் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.அந்த நினைவேந்தலில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்,உறவுகள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.உங்கள் பிள்ளைகளின் தியாகம்,அர்ப்பணிப்பினை நினைவுகூரும் இந்த நாளில் அவர்கள் விதைக்கப்பட்டுள்ள இடத்தில்வந்து நினைவேந்தலை செய்வதற்கு இதுவொரு நல்லதருணமாகும் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .