Princiya Dixci / 2021 மார்ச் 11 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெறும் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராட்சித் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் மண்ணை வெளி பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் பிரதேச மீனவர்கள், மீன்பிடித் துறைமுகத்தில் மணல் ஏற்றப்பட்ட வாகனததின் முன்னாள் வாகனத்தை செல்ல விடாது தடுத்து, தங்களது எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று (11) ஈடுபட்டனர்.
இலங்கை மீன்பிடித்துறை முகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராட்சித் திட்டத்துக்கு அமைய, மீன்பிடி துறைமுக பிரதேசத்தில் தோண்டப்படும் மணல் அகழ்வினாலும் மண்னை கழுவும் உப்பு நீர் மீண்டும் பிரதேசத்துக்குள் செல்வதாலும் தமது பிரதேசம் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக பிரதேச மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த இடத்துக்கு வருகைதந்த வாழைச்சேனை பொலிஸார், மணல் அகழ்வில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
இதனையடுத்து வாகனத்தில் ஏற்றப்பட்ட இரண்டு மணல் லோடுகளையும் செல்வதற்கு விடுவது என்றும் நாளை (12) இரு தரப்பினரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்து மேற்கொண்டு மணல் தோண்டுவதா அல்லது நிறுத்தவதா என்ற முடிவுக்கு வர இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அது வரையில் மண் அகழ்வது மற்றும் மண்ணை அவ்விடத்தில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு ஏற்றுவதில்லை என்று பொலிஸார் தெரிவித்தன் பின்னர் அவ்விடத்தில் கூடிய மீனவர்கள் கலைந்து சென்றனர்.


30 minute ago
41 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago
48 minute ago
1 hours ago