2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துவிச்சக்கரவண்டி சவாரியூடாக விழிப்புணர்வு பவனி

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அவர்களின்  ஆலோசனையின் கீழ் தொற்றா நோய்  தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய விபத்து வாரத்தினை முன்னிட்டு துவிச்சக்கர வண்டி சவாரியூடாக விழிப்புணர்வு பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'வீதி ஒழுங்குகளை பின்பற்றி வாகன விபத்துகளை தவிர்ப்போம்',  'வீதியில் செல்லும் பாதசாரிகளை  அவதானித்து வாகனங்களை செலுத்துவோம்',  'பெற்றோலுக்காக காத்திராது  துவிச்சக்கர வண்டியில் செல்வோம்', 'மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்தாது இருப்போம்',  'வீதியில் அவதானமாக செல்வோம் - உறவுகளை காப்பாற்றுவோம்'  போன்ற  விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பதாகைகளுடன்  நடைபவனி மட்டக்களப்பு சுகாதார பணிமனையில் இருந்து  மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்தை கடந்து சென்று போதனா வைத்தியசாலையை அடைந்து, மீண்டும் அங்கிருந்து லேக் வீதி ஊடாக பிராந்திய சுகாதார பணிமனை சென்றடைந்தனர்.

இந்நிகழ்வின் போது வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .