2025 மே 21, புதன்கிழமை

தெருவழியில் வெளிநாட்டு மோகம்

வ.துசாந்தன்   / 2017 நவம்பர் 01 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராமங்கள் தோறும் “வெளிநாட்டு மோகம்” எனும் தலைப்பிலான தெரு நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றது.

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையில் பட்டிப்பளை பிரதேச “கட்டியம்” ஆற்றுகைக் குழுவினரால், இத்தெரு நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நாடகத்தின் இரண்டாவது ஆற்றுகையானது, மாவடிமுன்மாரியில் இன்று (01) நிகழ்த்தப்பட்டது.

முறையான தொழில் பயிற்சியொன்பை் பெற்று, வெளிநாடு செல்வதே நன்மை பயக்கும் என்பதைக் கருவாக கொண்டு, இந்நாடகம் ஆற்றுகை செய்யப்படுகின்றது.

குறித்த பிரதேசத்திலிருந்து அதிகளவானவர்கள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லுகின்ற நிலையிலும் தொழில்பயிற்சி பெற்று சான்றிதழ்களுடன் வெளிநாடுசெல்லாமையால் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். இதனைக் குறைக்கும் வகையில் இந்நாடகம் ஆற்றுகை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X