Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வாரம் நாளை மறுநாள் (26) ஆரம்பமாகவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளிலும், டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகாமல் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் களப்பணிகள் இடம்பெறவுள்ளனவென, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்துக்கான நடவடிக்கைகளையும் களப்பணிகளையும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஒழுங்குசெய்துள்ளனர்.
டெங்குக் கட்டுப்பாட்டுவார நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினரோடு இணைந்து முப்படையினரும் பொலிஸாரும் உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலங்களின் நிர்வாக அலுவலர்களும் பாடசாலைகளும் கல்வி அலுவலகங்களும் செயற்படவுள்ளன.
டெங்குக் கட்டுப்பாடு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், முன்னுரிமைப்படுத்தக் கூடிய டெங்கு அபாயக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளாக (Priority Dengue Risk Area), மட்டக்களப்பு நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவும், ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவும் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் ஏனைய 12 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளும், டெங்கு அபாயப் பிரதேசங்களாக (Dengue Risk Area) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வார நிகழ்வுகள், டெங்கு அபாயப் பிரதேசங்களில் நாளை (26) தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறும்.
ஏனைய கூடிய டெங்கு அபாயக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளில், நாளை மறுநாள் (26) தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை, தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வார நிகழ்வுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago