Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகிய இரண்டு தேசிய பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் 98.5 மில்லியன் ரூபாய் நிதி, கல்வி அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி மீரா பாலிகா தேசியப் பாடசாலையின் வகுப்பறைக் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக சுமார் 48 மில்லியன் ரூபாயும், காத்தான்குடி மத்திய கல்லூரியின் கேட்போர்கூட மிகுதி வேலைகளுக்காக சுமார் 40.5 மில்லியன் ரூபாயும் கல்வி அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த, பாடசாலைகளின் தேவைப்பாடுகள் சம்பந்தமாக, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்ததற்கமைய, கல்வியமைச்சால் மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயம், மெத்தைப்பள்ளி வித்தியாலயம் ஆகியவற்றை தரமுயர்த்துவது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
38 minute ago