Editorial / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
'கிரீடா சக்தி' எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை ரீதியாக விளையாட்டுத் துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட காற்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 19வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில பங்குபற்றிய மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய அணியினரே தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொலன்னறுவை தேசியவிளையாட்டு மைதானத்தில் கடந்த 27ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெற்றிருந்தது. லீக் முறையில் நடாத்தப்பட்ட இப்போட்டியில், ஏ குழுவில் நான்கு அணிகளையும் வெற்றி கொண்ட மட்டக்களப்பு பன்சேனை அணியினர், வீ பிரிவின் களுத்துறை அணியுடன் நடைபெற்ற அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.
கொழும்பு மாவட்ட அணியுடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியில், இரு அணிகளும் ஒவ்வொரு கோள்களை உட்புகுத்தி சமனிலையில் போட்டி நிறைவுபெற்றது. தொடர்ந்தும் வெற்றியை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற தண்டணை உதைப்போட்டியில் கொழும்பு அணியினர் கொழும்பு அணியினர் 4கோள்களை இட்டு முதலிடத்தினையும், மட்டக்களப்பு பன்சேனை அணியினர் 3 கோள்களையும் இட்டு இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
குறித்த போட்டியில் பங்கேற்றிருந்த மட்டக்களப்பு மாவட்ட பன்சேனை அணியின் 8 பேர் தேசிய அணிக்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை இப்போட்டியில் பங்கேற்றிருந்த மட்டக்களப்பு அணி வீராங்கணை பா.வசந்தினி மொத்தமாக 8 கோள்களை இட்டு சாதனையை நிலைநாட்டியுள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது.
தேசிய மட்டத்தில் சாதனை படைத்திருக்கும் மாணவர்களுக்கும், இதற்காக உழைத்து நின்ற பெற்றோருக்கும், உடற்கல்வி ஆசிரியர் தே.பவளசிங்கம், அதிபர் செ.ஜமுனாகரன், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மற்றும் ஏனைய அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மேற்கு சமூகம் தெரிவித்தது.
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago