2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தேரரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரைத்; தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரின்; மெய்ப்பாதுகாவலரான மேற்படி பொலிஸ் உத்தியோகத்தருக்கும்  தேரருக்கும் இடையில் அம்பாறையிலுள்ள மங்களகம விகாரையில் கடந்த வெள்ளிக்கிழமை (7)  வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத் தாக்கியதாக அம்பாறை பொலிஸ் நிலையத்தில் தேரர் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரை சனிக்கிழமை (8) தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X