2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம்’

கனகராசா சரவணன்   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம் எனவும் தேர்தல் இலாபத்தைக் கருத்திற்கொள்ளாமல், கொரோன வைரஸை தடுக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு, கோவிந்தன் வீதியிலுள்ள மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இதனை வலியுறுத்தினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “சர்வதேச ரீதியாக கொரோன வைரஸ் மனித நேயத்துக்கே பாரிய ஆபத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கையிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்கின்றோம்” என்றார்.

30 வருடங்கள் யுத்தத்தில் துன்பங்களை அனுபவித்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மீண்டும் பீதியில் இருக்கின்றார்கள் என, அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் எமது பண்பாட்டியலில் உள்ள இருகரங்களைக் கை கூப்பி வணக்கத்தைத் தெரிவித்து, தொற்றுநோய்க்கு எதிரான செயற்பாடுகளில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டுமெனவும் அவர் வலியுத்தினார்.

அனாவசியமாகக் கூட்டங்களைக் கூடாது, பிள்ளைகளைத் தனியார் வகுப்புகளுக்கு அனுப்பாது, வீட்டில் இருந்தவாறே இந்த வைரஸைத் தடுக்க முன்வரவேண்டுமென்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X