2025 மே 02, வெள்ளிக்கிழமை

தேர்தல் சட்ட மீறல்கள்; ‘கண்காணிப்பு அவசியம்’

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

தேர்தல் காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு கண்காணிப்புக் குழுக்கள் இருப்பது அவசியமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று (01) அவர் கருத்துரைக்கையில், தற்போது நாட்டில் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், இதுவரை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படவும் இல்லை, மாவட்டங்களுக்கு அனுப்பப்படவுமில்லை.

“இலங்கையில் தற்போது சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவது தொடர்பிலே மிகப் பெரிய தெளிவின்மை ஏற்பட்டிருக்கின்றது.

“அரசாங்கக் கட்சியினர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தொடக்கி வைப்பதும், திறந்து வைப்பதுமான நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல இடங்களில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

“குறிப்பாக, நீண்ட நாள்களாக இயங்காதிருந்த வாழ்ச்சேனைக் காகித ஆளையில் அட்டைத்தாள் உற்பத்திக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

“தேர்தல் காலத்தில் நடைபெறுகின்ற இது போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரிவிக்கப்படலாம். அவ்வாறு தெரிவிப்பதற்கு கண்காணிப்புக் குழுக்கள் இருப்பது அவசியம்.

“பொதுமக்கள், கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவிக்க கண்காணிப்புக் குழுவினர் களத்துக்குச் சென்று நிலைமையை அவதானித்த பின் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தெரிவிக்க முடியும். ஆனால், இத்தகைய நடைமுறைகளுக்கு இந்த நாட்டில் தற்போது வழியேதும் இல்லை” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X