2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 மே 02 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி நெறியை முடிந்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, பொதுக் கட்டடத்தில் நேற்று (01) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பனை அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன், பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கண்ணன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில், 12 பேருக்கு தையல் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு, பனை அபிவிருத்தி உற்பத்தியாளர்களுக்கு பிரதியமைச்சரால் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதியமைச்சர், பனை அபிவிருத்தி அதிகாரசபைப் பணிப்பாளர் ஆகியோரது சேவையைப் பாராட்டி, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.

இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, பிரதியமைச்சரின் கிராமியப் பொருளாதாரத் துறைக்கு மேலதிகமாக, மின்பிடித்துறை மற்றும் நீரகவளமூல பிரதியமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .