2026 மே 21, வியாழக்கிழமை

தொடர் கொள்ளை : பெண் உட்பட அறுவருக்கு விளக்கமறியல்

Janu   / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்ட பின்னர் அவர்களைக் கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகக் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய சகோதரர் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் மீண்டும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மயக்க மருந்து வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு - வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் தடுப்பு காவலில் 3 நாட்கள் வைத்து தொடர்ந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் வைத்து மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் ஆள் அடையாள அணிவகுப்பு வியாழக்கிழமை (02) நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாண பெருங்குற்றத் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து ஏற்கனவே மயக்க மருந்துகள், கார், ஆட்டோக்கள் மற்றும் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலதிக சாட்சியங்களை திரட்டும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X