Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனைப் பல்கலைக் கழகம், கடந்த ஏப்ரல் மாதம் நடத்தவிருந்த முதலாம் வருட 100 சதவீத மட்ட வெளிவாரி புதிய பாடத்திட்ட பொதுக் கலைமாணி தொடர் தொலைக் கல்விப் பரீட்சைகள், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறுமென, பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சைகள், கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டில் பரவிய ஒருவகைக் காய்ச்சல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மண்சரிவு, வெள்ளம் என்பனவற்றால் பிற்போடப்பட்டிருந்தன.
ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுக் கலைமாணி பட்டப் பரீட்சைக்கான அனைத்து மாணவர்களும் அம்மாதம் இடம்பெறவுள்ள இப்பரீட்சைக்குத் தோற்றத் தகுதியானவர்களாகக் கொள்ளப்படுவார்கள் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் பிரதிப் பதிவாளர் ஆர்.வி.எஸ். ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் புதிய அனுமதிப்பத்திரம் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் மேற்படி பரீட்சைகள் நாடெங்கிலும் வெவ்வேறு பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்ற அதேவேளை, மட்டக்களப்பில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு புனித தெரேசா மகளிர் வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலாநந்தா வித்தியாலயம், கருவேப்பங்கேணி விபுலாநந்தாக் கல்லூரி, தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயம் ஆகியவற்றில் நேர அட்டவணைப்படி நடைபெறும் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .