Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூன் 11 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம், மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதென, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
இப்பீடம், கடந்த சனிக்கிழமை (09) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, பீடாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீட மாணவர்கள், மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் கற்றல் நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருவதாகவும் அதனை முடிவுக்குக் கொண்டுவர பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் மாணவர்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இதேபோன்று பகிடிவதை சர்ச்சை காரணமாக மூடப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை வெகுவிரையில் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் தங்கமுத்து ஜயசிங்கம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
7 hours ago
10 May 2025