2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை மனித உரிமை மீறலாகும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றி, இதுவரை நிரந்தர நியமனம் பெறாமலிருக்கும் 1,500க்கும் மேற்பட்ட மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்காமலுள்ளமை, மனித உரிமை மீறலாகுமென, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, இன்று  (30) அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த காலங்களில், தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

"கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தபோது, தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பாக மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு, தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, காலந்தாழ்த்தாது நியமனம் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என, அவர் நினைவுபடுத்தினார்.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் அப்போதைய கல்வியமைச்சரின் தலைமையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்ட போதிலும், ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரை தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே, கிழக்கு மாகாண ஆளுநர், இவ்விடயத்தில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்காது, உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X