Princiya Dixci / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாண தொல்பொருள் ஜனாதிபதிச் செயலணியில் சிறுபான்மையினரையும் நியமிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த செயலணிக்கு சிறுபான்மையினரை புறக்கணித்து, மேலும் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மூத்த பேராசிரியர் அனுர மானதுங்க, காணி ஆணையர் நாயகம் கீர்த்தி கமகே, சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஆர்.டி.நந்தனா சேனதீர மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அசின்சல சேனவிரத்ன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செயலணியில் அங்கம் வகித்த ஐந்து உறுப்பினர்களில் சிலர் ஓய்வுபெற்றமை மற்றும் இடமாற்றம் பெற்றதால் புதிய நியமனங்கள் நடைமுறைக்கு வருவதாக வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் ஜனாதிபதி செயலணி, 2020 ஜூன் 1ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. இதில் தமிழ் மற்றும் முஸ்லிம்களை இணைக்கும்படி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனால் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பெயர் பட்டியலொன்றை சமர்ப்பித்திருந்தனர். அந்த பட்டியல் குறித்து அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதற்கு கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago