2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தொழிற் சங்க போராட்டத்தால் கிழக்கு தபால் அலுவலக சேவைகளும் முடங்கின

Princiya Dixci   / 2021 மார்ச் 31 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ம்.எம்.அஹமட் அனாம்

நாடளாவிய ரீதியில் உள்ள 6 தபால் தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் (31) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் சுகயீன விடுமுறையை முன்னெடுத்துள்ளமையால், தபால் அலுவலக சேவைகள் முடங்கியுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள், திருகோணமலை - தோப்பூர் தபால் நிலையம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X