2025 மே 07, புதன்கிழமை

தொழிற்சந்தை வாய்ப்பு கண்காட்சி

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.எல்.ஜவ்பர்கான்

 

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் செயற்படும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட யுவதிகளின் ஆக்கப் பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்கும் அதனூடாக சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும், விசேட கண்காட்சி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில், இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹம்பத் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

கண்காட்சியில், பயிற்சி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், ஆடை அலங்காரப் பொருள்கள், கைத்தெறி நெசவு உற்பத்திகள், ஆடவர்களுக்கான அலங்காரப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், தொழில்நுட்ப ரீதியில் தயாரிக்கப்பட்ட பாவனைப் பொருள்கள் என்பன காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியை பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் பார்வையிடவும் நியாய விலையில் கொள்வனவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட ஆக்கப் பொருள்களே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுத்வின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண முலமைச்சின் செயலாளர் ஏ.எல்.ஏ.அசிஸ், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X