Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 மே 01 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து செயற்படுகின்ற தொழில்பேட்டையை, வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்கவுள்ளதாக, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுடனான, திறந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியொன்று, மீராவோடை அமீர் அலி கேட்போர்கூடத்தில் நேற்று (30) இரவு இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் தொழில் ரீதியாக அரச மற்றும் தனியாரோடு இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையை, வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம். தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து, தொழிற்றுறைகளை, உங்கள் போன்ற இளைஞர்களுக்கும் பகிர்ந்து செய்வதற்கான வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்தப் பணியில் உங்களையும் இணைந்து நாங்கள் கௌரவப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டார்.
கல்குடாவை, போதையற்ற ஒரு பிரதேசமாக மாற்ற எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், "எமது சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு, எங்களிடம் உள்ள அரசியல் என்கின்ற ஆயுதத்தை வைத்து, எவ்வளவு தூரம் செய்ய முடியுமோ அந்தப் பணியை செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்" என்றும் தெரிவித்தார்.
கல்குடா பிரதேசத்திலுள்ள இளைஞர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முனைப்பின் ஆரம்பப் பணியாகவே, இளைஞர்களுடனான இக்கூட்டம் இடம்பெற்றது என்று குறிப்பிட்ட அவர், தொழில் வாய்ப்பு, கல்வி ரீதியான உதவி, தொழில் வழிகாட்டல், தனிப்பட்ட விடயங்கள், கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் கை கொடுக்க வேண்டிய பொறுப்பு, அரசியல்வாதியின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், “எதிர்காலத்தில் அனைத்து வேலைத்திட்டங்களும் இளைஞர்களின் கையில் வழங்கப்பட்டு, நீங்களே அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில், உங்களுக்கு அந்த ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம்” என்று வாக்குறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
43 minute ago
17 May 2025