2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘தோற்றுவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தாம் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும்கூட, சிறுபான்மையினருக்கு எவ்வித நன்மைகளையும் கிடைக்கப் போவதில்லை” என்றும் “தோற்றுவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும்” என்றும் முன்னாள் அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழ் - முஸ்லிம் கட்சிகளும் குடிமைச் சமூக முக்கியத்தர்களும் கூடிப் பேசி பொது முடிவொன்றுக்கு வராமல் தமிழ் பேசும் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதை நான் முன்னரே உணர்ந்திருந்தாலும் இப்படியான ஒரு பொது வேட்பாளர் பற்றிய கருது கோள் இத்தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்டு, தமிழ் பேசும் அரசியல் அரங்கில் அறியப்படுவது எதிர்காலத்தில் இத்தகைய வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்கான சாதகத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இக்கருத்து சிறிதளவாவது மக்களைச் சென்றடைய, கட்டுப்பணம் செலுத்தும் செயல் செய்யக்கூடும் என்பதனால்தான் அதனைச் செய்தேன். கட்டுப்பணம் செலுத்தும் போதே, வேட்புமனு தாக்கல் செய்வதில்லை என்ற முன் முடிவோடுதான் இருந்தேன்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X