2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நாசிவந்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முதன்முறையாக சித்தி பெற்ற மாணவன்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்.

தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 80 வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு மாணவன் சித்தி பெற்றுள்ளார்.

அதாவது 1936ஆம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் எவரும் சித்தி பெறவில்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசீல் பரீட்சையில் திலிப்குமார் சனுஜன் என்ற மாணவன் 164 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X